மயிலாடுதுறை பாஜக வேட்பாளர்கள் தாமரை மாலை அணிந்தபடி வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை பாஜக வேட்பாளர்கள் தாமரை மாலை அணிந்தபடி வாக்கு சேகரிப்பு
X

தாமரை மாலை அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் 

மயிலாடுதுறை நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தாமரை மாலை அணிந்தும், தாமரை மலரினை கொடுத்தும் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் பாஜக சார்பில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சி 16 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சந்திரசேகரன், 6வது வார்டில் போட்டியிடும் பாரதிகண்ணன் ஆகியோர் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் பாஜக நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு தாமரையிலான மாலையை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.

16வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சந்திரசேகரன் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களுக்கு தாமரை சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் தாமரை மலரை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இதேபோல் 6வது வார்டில் போட்டியிடும் பாரதி கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களின் கால்களில் விழுந்து வணங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு தான் போட்டியிடும் சின்னமான தாமரை மலரினை கொடுத்தும், கால்களில் விழுந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!