மயிலாடுதுறை நகராட்சியில் பசுவுடன் வந்து பாஜக வேட்பாளர்கள் மனுதாக்கல்

மயிலாடுதுறை நகராட்சியில் பசுவுடன் வந்து பாஜக வேட்பாளர்கள் மனுதாக்கல்
X

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் , பசுவுடன் வந்து பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட பசுமாட்டுடன் வந்து பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை நகராட்சியில் இன்று பாஜக சார்பில் 7-வார்டு களுக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சின்னக்கடை வீதியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் கோபூஜை செய்து, பின்னர் பசுமாட்டுடன் பாஜக வேட்பாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி