மயிலாடுதுறை அருகே இருதரப்பினர் மோதல்: உதவி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை அருகே இருதரப்பினர் மோதல்: உதவி பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு
X

பைல்படம்.

மயிலாடுதுறை அருகே இருதரப்பினர் மோதல். உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி உதவிப் பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு.

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல். உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி உதவிப் பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு. 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை.

மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமம் நத்தம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வைத்தியநாதன். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் தாவரவியல் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று உறவினரை வீட்டிற்கு அழைக்க கருப்பையன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தன், மனைவி செல்வி மற்றும் ஆனந்தன் உறவினர் பிரவீன் ஆகியோருக்கும் வைத்தியநாதனுக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் வைத்தியநாதனை பார்த்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஆனந்தன் மற்றும் பிரவீன் உதவிப்பேராசிரியர் வைத்தியநாதனை நெற்றிப் மற்றும் கை பகுதியில் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க முயன்ற உறவினர் கருப்பையனையும் அரிவால் மற்றும் கட்டையால் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்த வைத்தியநாதன் தரப்பினர் பிரவீன் மண்டையை உடைத்தனர். இந்த மோதலில் காயமடைந்த 3 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!