மயிலாடுதுறையில் அமையவுள்ள நகர சுகாதார மையக் கட்டிடத்திற்கு பூமி பூஜை

மயிலாடுதுறையில் அமையவுள்ள நகர சுகாதார மையக் கட்டிடத்திற்கு பூமி பூஜை
X

மயிலாடுதுறை அருகே புதிய சுகாதார மைய கட்டிடத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் அமையவுள்ள நகர சுகாதார மையக் கட்டிடத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வடக்குவீதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 860 சதுரஅடி பரப்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், தேசிய சுகாதார திட்டம் 15 வது நிதிக்குழுவில் நகர சுகாதார மையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்று அந்த இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று அடிக்கல்நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில், நகராட்சித் தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் பாலு மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story