மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு  ஆதரவாக கடை அடைப்பு
X

பாரத் பந்த் போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் பாரத் பந்த் போராட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட வணிகர்கள் மதியம் வரை அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை, ஆக்கூர், செம்பனார்கோவில் ஆகிய இடங்களில் முழுமையாக கடைகள் அடைக்கட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் ஆக்கூர், பொறையார், ஆகிய இடங்களில் சாலை மறியலும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!