மயிலாடுதுறை: வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

மயிலாடுதுறை: வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
X

மயிலாடுதுறையில் பாரத ஸ்டேட் வங்கி மூடப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

ரயில்வே,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் போன்ற நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. இதனை கண்டித்தும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கைவிட்டு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கான உத்தரவாதத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கயைை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு டிசம்பர் 16 மற்றும் 17 ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தன.

இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக அதனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டன. பொதுத்துறை வங்கிகள் மட்டும் இன்றி பழமையான தனியார் வங்கி ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் அந்த வங்கிகளும் இன்று செயல்படவில்லை.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 50 தேசிய வங்கிகள் மூடப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் வியபாரிகளின் வங்கி பண பரிவர்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் வங்கி சேவை கிடைக்காமல் தவித்தனர். இந்த போராட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!