ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்

ஊழியர்களுக்கு கொரோனா: சீர்காழியில் 2 வங்கிகள் மூடல்
X
சீர்காழி தாலுகாவில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு வங்கிகள் மூடப் பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வங்கிகளும், மதியம் 2 மணிவரை மட்டும் இயங்குவதற்கு, கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீர்காழி தாலுகாவில் இயங்கி வரும் இரண்டு வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீர்காழியில், இந்தியன் வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும், திருமுல்லைவாசல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்தந்த வங்கி நிர்வாகங்கள், வங்கிகளை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த அந்த வங்கிகளை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளுக்காக, வங்கி இன்று செயல்படாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!