பிறந்து சிலமணி நேரமான ஆண் குழந்தை காட்டுப் பகுதியில் கண்டெடுப்பு

பிறந்து சிலமணி நேரமான  ஆண் குழந்தை காட்டுப் பகுதியில் கண்டெடுப்பு
X
சீர்காழியில், பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை, காட்டுப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமையிலாடி கிராமத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் நண்பர்கள் வயல் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில், குழந்தை அழும் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுள்ளது.

உடனடியாக, மூங்கில் காட்டுக்குள் சென்று மனோஜ் பார்த்துள்ளார். அப்போது, பிறந்து சிலமணி நேரமே ஆன நிலையில், பச்சிளம் குழந்தை ரத்தத்துடன் தொப்புள் கொடியோடு கிடந்துள்ளது. அந்த ஆண் குழந்தையை பத்திரமாக கைப்பற்றி, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து, கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!