மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம்
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் உரைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள் பயன்பாடு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் தன்மையுடைய இயற்கையில் கிடைக்கும் மாற்று பொருட்களான துணிப்பைகள், சணல் பைகள், பாக்கு மட்டையில் ஆன பொருட்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கண்ணாடி குவளைகள், மரக்கரண்டிகள், வாழையிலைகள், மற்றும் தாமரை இலைகள் போன்றவைகளை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட தமிழக அரசு அறிவறுத்தியுள்ளது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கோரி பிரச்சார வாகனம் புறப்பட்டது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்ற பிரச்சார வாகனத்தில் காணொலிக் காட்சி வாயிலாக பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இந்தப் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் நாகை மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu