முதன்மைகாவலர் கொலை முயற்சி: பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

முதன்மைகாவலர் கொலை முயற்சி: பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
X
கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடி மற்றும் கூட்டாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிபதி தீர்ப்பு.

கடந்த 2014ம் ஆண்டு மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் முதன்மை காவலர் மூர்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டடிருந்தார். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்களை விசாரித்தார். அவர்கள் திடீரென்று முதன்மை காவலர் மூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி, அரசு பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வெள்ளப்பள்ளம் வினோத் அவரது கூட்டாளி மயிலாடுதுறை நெடுமருதூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கவுதமன் உத்தரவிட்டார். இதனையடுத்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். என்கவுண்டர் செய்யப்பட்ட மணல்மேடு சங்கரின் கூட்டாளியான பிரபல ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத் மீது 4 கொலைவழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது. வினோத்தின் கூட்டாளி கோகுலகிருஷ்ணன் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future