மாநில தடகளம் - மயிலாடுதுறையில் நாளை வீரர், வீராங்கனையர் தேர்வு

மாநில தடகளம் - மயிலாடுதுறையில் நாளை  வீரர், வீராங்கனையர் தேர்வு
X
மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, வீரர், வீராங்கனையர் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடைபெறுகிறது.

மயிலாடுதுறையில், ராஜீவ்காந்தி சரக சாய் விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்ய, நாளை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், நாகை, மயிலாடுதுறை மாவட்ட சேர்ந்த 14, 16, 18 மற்றும் 20 வயதிற்கு உட்பட்டோர் என்று நான்கு பிரிவுகளில் தடகள போட்டிகளில் நடக்க உள்ளது.

இதில் தேர்வு செய்யப்படுவர்கள், 8-ஆம் தேதி திண்டுக்கலில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். இதில் பங்குபெற விரும்பும் வீரர்கள், வீராங்கனையர், தங்கள் பெயர்களை நாளை காலை 8 மணிக்கு, 9655466213, 8973527329 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் செல்வகணபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!