மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி

மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
X

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு மயிலாடுதுறையில் அனைத்து கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறையில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அனைத்து கட்சியினர் ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மயிலாடுதுறையில் தேசிய ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தி.மு.க, த.மா.கா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மவுன ஊர்வலமாக வந்து பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.

கூறைநாட்டில் தொடங்கிய அமைதிப் பேரணி முத்துவக்கீல் சாலை பகுதியில் நிறைவடைந்தது. பா.ஜ.க. ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்‌.எல்.ஏ ராஜகுமார், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!