மயிலாடுதுறை: பட்டமங்கலம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை:  பட்டமங்கலம் ஊராட்சியில்  கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
X

பட்டமங்கலம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் லலிதா, ராஜகுமார் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி மஞ்சளாறு ஆற்றங்கரையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு முகாம் மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் இமய நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

துணை இயக்குநர் மருத்துவர் சுப்பையன், உதவி இயக்குநர்கள் முத்துகுமரசாமி, உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் 426 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தாது உப்பு கலவைகளை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 426 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளதாகவும் , தற்போது முதற்கட்டமாக 5 ஆயிரம் கோமாரி தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வந்துள்ளதாகவும் படிப்படியாக அனைத்து மாடுகளுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை செலுத்தி விடுவோம் என்றும் முகாமில் கால்நடைகளின் பிற நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
future ai robot technology