மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில் பெரம்பூர் காவல்துறை சார்பாக  நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்.

திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

திருவிளையாட்டம் சௌரிராஜன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்த கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் இரமேஷ் தலைமை வகித்தார். பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் டி.ஆர்.சிவதாஸ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பான்பராக், குட்கா, சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். இதில், காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவலர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!