மயுிலாடுதுறை: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

மயுிலாடுதுறை: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
X

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்து உள்ளது.

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கடையை மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம்போல் கடையை பூட்டிச்சென்றுள்ளார்.

இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு அறுக்கப்பட்டு கிடந்தது. மேலும், கடையின் பின்புறம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவர் துளையிடப்பட்டிருந்ததும், சி.சி.டி.வி. உடைக்கப்பட்டிருந்ததும், கடையின் மேலும் சில பூட்டுக்களை திறக்க முடியாததால் சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பெரம்பூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜா சம்பவ இடத்துக்கு வந்து, கொள்ளை முயற்சி குறித்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயை வரவழைக்க உத்தரவிட்டார்.

இக்கடையில் ஏற்கெனவே ஒரு முறை கொள்ளை நடந்துள்ளதால், கடையில் வசூலாகும் பணத்தை பத்திரப்படுத்த லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முயற்சித்து முடியாததால், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் வசூலான மூன்றரை லட்சம் ரூபாய் தப்பியது. மேலும் கடையில் வைத்திருந்த மதுபாட்டில்களை சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, கடையின் சி.சி.டி.வி.பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!