திருக்கடையூர் அமிர்தகடே ஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருக்கடையூர் அமிர்தகடஸே்வரர் கோயிலில் இன்று கொடியேற்றம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற இக்கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாள், காலசம்ஹாரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, கொடி மரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு காலை 10 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் சித்திரை திருவிழாவிற்கான பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி சகோபுர வீதி உலாவும், 12-ஆம் தேதி இரவு எமன் சம்ஹாரமும், 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரோட்டமும், 16-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu