மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் உருவ சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் உருவ சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மயிலாடுதுறை அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அம்பேத்கர் உருவ சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்திய சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், சசிகுமார், ஒன்றிய துணைத் பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் உதய சேகர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி