காலமநல்லூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சி யினர் திமுகவில் ஐக்கியம்

காலமநல்லூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சி யினர் திமுகவில் ஐக்கியம்
X

காலமநல்லூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

காலமநல்லூர் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காலமநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் இருந்து அதிமுக மற்றும் பாமக கட்சிகளில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன் ஏற்பாட்டில் இந்த இணைப்பு விழாநடைபெற்றது. பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் 100 மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில், நாகை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், செம்பை ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், ஒன்றிய துணைத்தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!