மரங்களை பொக்லைன் கொண்டு அழிக்கும் ஆக்கூர் ஊராட்சி மன்றதலைவர்: பொதுமக்கள் ஆவேசம்

தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் ராஜகோபால் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சன்னதி தெருவில் 30 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் , வீட்டுக்கு வீடு மரங்கள் வளர்ப்போம் என்ற தாரகமந்திரத்திற்கு ஏற்றவாறு அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் நிழல் தரும் மரங்களான பொங்குமரம், மலைவேம்பு, ஆத்துபூசனம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களை ஆர்வமுடன் நட்டு வைத்தனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நட்ட 15 ற்கும் மேற்பட்ட மரங்கள் தற்போது வளர்ந்து அப்பகுதியே பசுமையாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆக்கூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தனது சொந்த பொக்லைன் இயந்திரம் கொண்டு சன்னதி தெருவில் உள்ள 15 கற்கும் மேற்பட்ட மரங்களை எந்தவொரு முன் அறிவிப்பபுமின்றி வெட்டியுள்ளார். அப்பகுதி பெண்கள் கேட்டதற்கு தகாத வார்த்தைகளை பேசிவிட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் நான் யாரிடம் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் அப்பகுதியினர் அனுப்பியுள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu