செம்பனார்கோவிலில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு கூட்டம்

செம்பனார்கோவிலில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு கூட்டம்
X

செம்பனார் கோவிலில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

செம்பனார் கோவிலில் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மண்டல துணைத் தலைவர் மாதானம் சத்தியமூர்த்தி, மயிலாடுதுறை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைந்த விஜயலட்சுமி அம்மையார் மற்றும் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும், இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தலைமை கழகத்தால் புதிதாக பொறுப்பாளர்கள் அறிவித்தமைகாக நன்றி தெரிவித்தும், வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அறிவிக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது குறித்தும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒன்றிய நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!