மயிலாடுதுறை அருகே 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் ஐக்கியம்
மயிலாடுதுறை அருகே ஐம்பதிற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் அ.தி.மு.க. கட்சியினர் நான்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மாநில விவசாய அணி இணை செயலாளர் பால.அருள்செல்வன் தலைமையில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், தரங்கம்பாடி பேரூர் தி.மு.க. செயலாளர் வெற்றிவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu