மயிலாடுதுறை: அ.தி.மு.க.அமைப்பு தேர்தலில் போட்டியிட விருப்ப மனு

மயிலாடுதுறை: அ.தி.மு.க.அமைப்பு தேர்தலில் போட்டியிட  விருப்ப மனு
X

அ.தி.மு.க.கட்சி  தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் விண்ணப்ப  மனுக்களை அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க.அமைப்பு தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் விண்ணப்பம் அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ,கொள்ளிடம் ஒன்றியம் ,சீர்காழி நகராட்சி,வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்- 2021 இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதன்படி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு கழக செயலாளர்களுக்கான தேர்தல் விருப்பமனுவினை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜிடம் கட்சி தொண்ட்கள் வழங்கினர்.

அமைப்பு தேர்தலுக்கான அ.தி.மு.க. தலைமையால் நியமிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி கழக செயலாளர் போகர் சி.ரவி, தேர்தல் ஆணையர்கள் கார்த்திகேயன்,கோவிந்தராஜ்,பாபு , ஒன்றிய கழகச் செயலாளர்கள் நகர கழக செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பிற அணி பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டு தேர்தல் நடக்கும் பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டனர்.அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளானோர் தேர்தலில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!