சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசை கண்டித்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திமுக அரசை கண்டித்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே, 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்; கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடன் தள்ளுபடியை பாரபட்சமின்றி செய்ய வேண்டும்; அதிமுக அரசின் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
ai marketing future