மயிலாடுதுறை:அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் ஐக்கியம்

மயிலாடுதுறை:அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் ஐக்கியம்
X

மயிலாடுதுறை அ.தி.மு.க. ஊராட்சி தலைவர்  எம்.ஆர்.கே. முருகன் தனது ஆதரவாளர்களுடன் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ.முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

மயிலாடுதுறை அ.தி.மு.க ஊராட்சி தலைவர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் முத்தூர் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. தலைவர் எம் ஆர் கே முருகன், இளைஞர் அணி செயலாளர் எம் சுபாஷ், கழனிவாசல் அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகர்.

இவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தங்களை குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் அவரது இல்லத்தில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

புதிதாக கழகத்தில் இணைந்த மூவருக்கும் கழகத்தின் துண்டு மற்றும் வேட்டிகளை அணிவித்து சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள் கூறினார்.

Tags

Next Story
ai based healthcare startups in india