மயிலாடுதுறை நகராட்சியில் அதிமுக, திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை நகராட்சியில்  அதிமுக, திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

அதிமுக வேட்பாளர் உமாசந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார் 

6வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பழுதடைந்துள்ள அடிபம்புகளை சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக வாக்குறுதி

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் 4 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சி 6 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உமாசந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தோப்புதெருவில் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது தெருவில் பழுதடைந்து கிடந்த அடிபம்பை சுட்டிகாட்டி தண்ணீர் வராமல் வெறும் காத்துதான் வருது என்றும் நான் வெற்றி பெற்றால் பழுதடைந்த அடிபம்பை தனது சொந்த செலவில் புதுப்பித்து தருவேன், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி சுகாதாரமான குடிநீர் வழங்குவேன் என்றும் வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதேபோல் 29வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரஜினி தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் புடைசூழ வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது