மயிலாடுதுறை 19வது வார்டுஅதிமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

மயிலாடுதுறை 19வது வார்டுஅதிமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
X

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த அதிமுக வேட்பாளர் 

மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.

மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (64). இவர் மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

அன்னதாட்சி அதிமுக தொண்டர்களுடன் காலையில் சென்று வாக்கு சேகரித்துள்ளார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையானதால், அன்னதாட்சி உணவு சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். மதியம் உணவு அருந்திய அவர் மாலை சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்துகொண்டுள்ளார். பூஜையில் கலந்து கொண்டிருந்தபோது அன்னதாட்சிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அன்னதாட்சி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி இறந்துபோனதால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அதிமுகவினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!