பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி  அதிமுக  வேட்பாளர் அறிவிப்பு
X
பூம்புகார் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு.

பூம்புகார் தொகுதி எஸ். பவுன்ராஜ், பூம்புகார்(61) தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போதைய மாவட்ட செயலாளர் ஆவார்.

பவுன்ராஜ், 1986ல் அதிமுகவில் உறுப்பினராக இணைந்து கிளைச்செயலாளர் பதவி வகித்தவர். தொடர்ந்து ௧௯௯௦ ல் செம்பனார்கோவில் ஒன்றிய துணைசெயலாளர் பதவியும், 2004ல் இருந்து தற்போது வரை செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார்.

2006ம் ஆண்டு பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் 2 முறை பூம்புகார் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். அதிமுக வளர்ச்சிக்காக 4 முறை சிறைசென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளாராக உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!