அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 5 பேர் போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது.
அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் மாவட்ட அவைத்தலைவர் மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட 9 பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட விருப்பமனுதாக்கல் இன்று நடைபெற்றது. ஆக்கூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கான விருப்பமனு பெரும் நிகழ்ச்சியில். கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கோ.சூரியமூர்த்தி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.
இதில் மயிலாடுதுறை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் மனுதாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் பவுன்ராஜூக்கு ஆதரவாக 8பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதேபோல் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து பேரணியாக வந்து மனுதாக்கல் செய்தனர். 9 பதவியிடங்களுக்கு 38பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu