மயிலாடுதுறை அருகே ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா துவக்கம்

மயிலாடுதுறை அருகே ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா துவக்கம்
X

மயிலாடுதுறை அருகே அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு விழா  நினைவு வாயிலை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை அருகே ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடி கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆதிதிராவிடர் இன மக்களுக்காக 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர் மாணவர்களை அரசு அலுவலர்களாகவும், பலதுறை வல்லுனர்களாகவும் உருவாக்கிய இப்பள்ளியில் தற்போது 54 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி தொடங்கி நூற்றாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி முன்னாள் மாணவர்கள் சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பெஞ்ச், மேசை மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான எல்.இ.டி. டி.வி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்.

பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடினர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று நூற்றாண்டு நினைவு வாயில் வளைவை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை மாவட்ட அலுவலர் வேணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்