விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டம் தொடக்கம்
மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாரம் தோறும் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டம் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்டது. முதியோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பால், முட்டை மளிகை பொருட்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு இன்று வழங்கப்பட்டது.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சமூக பணி நாளாக அறிவித்து ஏழை,எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை அகில இந்திய பொதுச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் இதனை துவக்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கேணிக்கரை பகுதியில் வாராந்திர சமூக நலப்பணி திட்டத்தை மாவட்ட தலைவர் குட்டி கோபி இன்று துவங்கி வைத்தார்.
முதியவர்களுக்கு பால்,முட்டை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு கடைபிடிக்கும் விதமாக மஞ்சள் பையில் பத்து வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அமின், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜய் மக்கள் இயக்கத்தின் இத்திட்டத்தினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu