கொரோனா நோயாளிகள் மூச்சுவிட உதவிய விஜய் மக்கள் இயக்கம்

கொரோனா நோயாளிகள் மூச்சுவிட உதவிய விஜய் மக்கள் இயக்கம்
X

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை விஜய் மக்கள் இயக்கம் வழங்கியது

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறலுக்கு உள்ளானவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் அந்த இயக்கத்தினர் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) வீரசோழனிடம் வழங்கினர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றையும் அவர்கள் வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்