சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி கோரி மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி கோரி மனு
X

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்தொழில் செய்ய அனுமதி கேட்டு மீனவர்கள் மயிலாடுதுறை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி கோரி மனு மயிலாடுதுறை மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. கடன்வாங்கி சுருக்கமடி தொழிலில் முதலீடு செய்துள்ள மீனவர்கள் சுருக்கமடிவலை தடையால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் செய்ய முடியாமல் முடங்கி பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் பூம்புகாரை தலைமை கிராமமாகக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 18-ஆம் தேதி பூம்புகாரில் கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இன்படி அரசு சுருக்கு வலையை மட்டும் தடை செய்துள்ளது. ஆனால் அச்சட்டத்தில் உள்ள 21 அம்ச மீன்பிடிதடை சட்ட ஒழுங்குமுறைகளை மீறி அனைத்து கிராமங்களும் தொழில் செய்து வருகின்றன. அத்தொழிலை உடனடியாக தடை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். அந்த சட்டங்களை மீறும் கிராமங்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!