கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகளுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க உத்தரவு
பைல் படம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோருக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்கிட தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவரால் காணொளிக் காட்சி ஆய்வுக்கூட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக ரேஷன் கார்டு வழங்கிட அனைத்து வட்ட வழங்கல் அலுவலரையும் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோர் ரேஷன் கார்டு பெற ஏதுவாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் செய்யும் அனைவருடைய மனுக்களும் உரிய விசாரணை செய்து உடனடியாக ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் வர இயலாதவர்கள் வட்ட வழங்கல் அலுவலரை, 9445000308,
8526626166 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu