மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம்

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம்
X

மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிறுத்தப்பட்ட ரெயில்களை இயக்க கோரி மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் இரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில்,தமிழகத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டி திட்டங்களை உடனடியாக விரைந்து செயல்படுத்த கோரியும், திண்டிவனம்- நகரி ரயில் பாதை பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், கொரோனா பெருந்தொற்றால் நிறுத்தப்பட்ட அனைத்து பாசஞ்சர் தொடர் வண்டிகளையும் உடனடியாக இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

பா.ம.க. நகர தலைவர்கள் ராஜா, வடிவேல், செயலாளர்கள் கமல் ராஜா, ராமகுமரேசன் மற்றும் நிர்வாகிகள் தங்க அய்யாசாமி, காமராஜ், அன்பழகன், கணேசன், விமல், சக்திவேல், மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி