சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தாய்

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு  தூக்கில் தொங்கிய தாய்
X
சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி என்.எஸ்.பி. நகரில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடி இருந்தவர் கார்த்திக். லாரி ஓட்டுநரான கார்த்திக் அவரது மனைவி பாரதி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாரதி தனது தாயாருக்கு போன் செய்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அப்போது உள்ளே சென்றபோது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க வைத்து விட்டு பாரதி தனியே தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பாரதியின் கணவர் கார்த்திக் வெளிமாநிலத்தில் பணிக்கு சென்று உள்ள நேரத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai automation in agriculture