9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கார், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கார் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர வலியுறுத்தியும் 15 வருடங்கள் முடிந்த வாடகை வாகனங்களுக்கான உரிம கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், செக் போஸ்ட்களில் கட்டாய வசூல் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கார், வேன், ஆட்டோ மற்றும் லோடு வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu