8 வயது சிறுமி சாதனை: மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்

8 வயது சிறுமி சாதனை: மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்
X

செந்தமிழினியா (வயது 8)

8 வயது சிறுமி மாநில அளவில் நடந்த கட்டா கராத்தே போட்டியில் 7 வயது பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே பரசலூர் கிராமத்தை சேர்ந்த ஜெனார்த்தனன், வாணிஸ்ரீ ஆகியோரின் மகள் செந்தமிழினியா (வயது 8). தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மாநில அளவில் நடந்த கட்டா கராத்தே போட்டியில் 7 வயது பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில், குழந்தைகள் தினத்தையொட்டி நடந்த கராத்தே போட்டியிலும் சிறுமி பங்கேற்று குமித்தே பிரிவில் தங்கப்பதக்கமும், கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் 8 வயது பெண்கள் பிரிவில் பங்கேற்று குமித்தே பிரிவில் தங்கப் பதக்கமும் , கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். இதன் மூலம் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க சிறுமி தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!