சீர்காழியில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் 8 டன், லாரி, டிராக்டர்கள் பறிமுதல்

சீர்காழியில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் 8 டன்,  லாரி, டிராக்டர்கள் பறிமுதல்
X

சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிமாவட்ட நெல் மூட்டைகள் எடுத்துச்சென்ற லாரி,டிராக்டர்கள் 

வெளி மாநில நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில் இந்த வெளிமாநில நெல் மூட்டைகள் பிடிபட்டுள்ளன

சீர்காழியில் வெளி மாவட்ட நெல் மூட்டைகள் 8 டன் மற்றும் லாரி, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதித்த நிலையில் குறைந்தளவு அறுவடை செய்யப்பட்டதை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு நெல் விளைச்சல் இல்லாததால் நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாநில, வெளி மாவட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சீர்காழி பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் கூடுதல் விலைக்கு விற்று லாபமடைந்து வந்தனர்.

இப்பகுதியில், மழையால் பாதித்த பயிர்களுக்கு, காப்பீடு கிடைக்காமல் உள்ளூர் விவசாயிகள் தவித்து வந்த நிலையில், வெளி மாநில நெல் மூட்டகளை கொள்முதல் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், வெளிமாநில, மாவட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் மறைமுகமாக விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடலூரில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அகணி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக, 8 டன் நெல் மூட்டையுடன் லாரி, 2 டிராக்டர்கள், சீர்காழி தாடாளன்கோவில் அரவை மில்லில் பதுக்கி வைத்திருப்பதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சீர்காழி குடிமை பொருள் தனி வட்டாட்சியர் இளங்கோவன் வழக்குபதிவு செய்து விசாரித்தது வருகிறார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil