மயிலாடுதுறையில் ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் 65-ஆவது ஆண்டு விழா

மயிலாடுதுறையில் ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் 65-ஆவது ஆண்டு விழா
X
65 ஆண்டுகளைக் கடந்தும் தனியார் நிறுவனங்களால் எல்சிஐ-யுடன் போட்டியிட முடியவில்லை.

மயிலாடுதுறையில் எல்ஐசி நிறுவனத்தின் எல்சிஐ 65- ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

எல்ஐசி நிறுவனத்தின் 65-ஆம் ஆண்டு விழா மயிலாடுதுறை எல்ஐசி கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கிளை மேலாளர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில், விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவரை காப்பாற்றும் மருத்துவர்களை கடவுளுக்கு ஒப்பானவர் என்று உறவினர்கள் போற்றுவார்கள். அதற்கு காரணம் குடும்பத்தின் தலைவரை காப்பாற்றுவதன் மூலம் அந்த குடும்பத்தையே மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரைக் காப்பாற்றுபவர் களை எப்படி கடவுள் என மக்கள் நினைக்கின்றனரோ, அதேபோல் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டு வருத்தத்தில் உள்ளவர்களை பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றும் புனிதமான பணியை எல்ஐசி மேற்கொள்கிறது.

இதன்காரணமாகவே எல்ஐசியை தனியாருக்கு தாரை வார்த்துவிடாமல் அரசே வைத்துள்ளது. இதனால்தான் 65 ஆண்டுகளைக் கடந்தும் தனியார் நிறுவனங்களால் எல்சிஐ-யுடன் போட்டியிட முடியவில்லை. எல்சிஐசியில் பணியாற்றும் அலுவலர்கள் தங்கள் பணியை அர்ப்பணிப்போடு ஆற்ற வேண்டும். இழப்பீடு கோரி வருபவர்களுக்கு காலதாமதம் செய்யாமல் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். அதேபோல், முகவர்கள் புதிய பாலிசி போடுவதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருவதிலும் காட்ட வேண்டும். அலுவலர்களும், முகவர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் போது நிறுவனம் மேலும் வளர்ச்சி அடையும் என்றார். நிகழ்ச்சியில், எல்ஐசி அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story