/* */

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 478 குவிண்டால் பருத்தி ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 478 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 478 குவிண்டால் பருத்தி ஏலம்
X

ஏலம் விடுவதற்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த பருத்தி மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,123க்கும், சராசரி 6,540க்கும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 வியாபாரிகள் பங்கேற்று, 374 விவசாயிகள் கொண்டுவந்திருந்த 478 குவிண்டால் பருத்தியைக் கொள்முதல் செய்தனர்.

பருத்தியைப் போன்றே விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், பயறு, உளுந்து, நிலக்கடலை, முந்திரி, துவரை, தேங்காய், மிளகாய், கரும்பு வெல்லம் போன்ற ஆகியவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்று பயனடையுமாறும், விளைபொருட்களை நாகை விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி, வேதாரண்யம், கீழ்வேளூர், திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெற்று அதிகவிலை கிடைக்கும் நேரங்களில் விற்று பயனடையுமாறு விவசாயிகளுக்கு நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 5 Oct 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு