தரங்கம்பாடியில் 40 பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ. வழங்கிய உதவித்தொகை ஆணை

தரங்கம்பாடியில்  40 பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ. வழங்கிய உதவித்தொகை ஆணை
X

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான ஆணைகளை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தரங்கம்பாடியில் 40 பயனாளிகளுக்கு நிவதோ முருகன் எம்.எல்.ஏ. உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் 40 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் மற்றும் 4 நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கினார்.

நிகழ்ச்சியில், என்.பி.இந்துமதி (ச.பா.தி), நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்ட வழங்கல் அலுவலர் பாபு, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!