ஸ்ரீராகவேந்திரசுவாமிகளின் 350-ஆவது ஆண்டு ஆராதனைவிழா: மயிலாடுதுறையில் தொடக்கம்
மயிலாடுதுறையில் ராகவேந்திர ஆராதனை கமிட்டி சார்பில் நடைபெற்ர ராகவேந்திர சுவாமிகளின் 350வது ஆண்டு ஆராதனை விழா
மயிலாடுதுறையில் ராகவேந்திர ஆராதனை கமிட்டி சார்பில் ராகவேந்திர சுவாமிகளின் 350வது ஆண்டு ஆராதனை விழா சேந்தங்குடி அக்ரஹாரத்தில் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று புஷ்பாஞ்சலி, பாகவத பஜனை, கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் சித்தியடைந்து 350 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பெளர்ணமிக்கு அடுத்த நாள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் மயிலாடுதுறை ராகவேந்திர ஆராதனை கமிட்டி சார்பில் சேந்தங்குடி அக்ரஹாரத்தில் 26-ஆவது ஆண்டு விழா துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, சுவாமி படத்திற்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பாகவத பஜனை, பாகவத நாட்டியம், கர்நாடக இசை பஜனை, ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் படத்திற்கு புஷ்பாஞ்சலியம் நடைபெற்றது. நிறைவாக, 25 வகையான பலகாரங்களைக் கொண்டு சிறப்பு நெய்வேத்யம் matrum ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் படத்திற்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது. ஞானகுரு பாகவதரின் பாகவத பஜனை மற்றும் உஞ்ச விருத்தி, ஆச்சார்யார் ஆசீர்வாதம் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu