தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 303-வது நினைவு தினம் அனுசரிப்பு
தரங்கம்பாடியில் சீகன் பால்கு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
ஜெர்மன் நாட்டு கிறிஸ்தவ பாதிரியார் சீகன்பால்குவின் 303-ஆவது நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள திருச்சபையில் அனுசரிக்கப்பட்டது. இவர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக டென்மார்க் அரசர் வேண்டுகோளை ஏற்று கிறிஸ்தவ மத போதகராக 1706 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி தரங்கம்பாடி கடற்கரை வந்தடைந்தார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் தமிழை முறையாகக் கற்றுக் கொண்ட சீகன்பால்கு இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தை தரங்கம்பாடி பகுதியில் நிறுவி பைபிளின் புதிய புனித நூலை முதன் முதலில் 1715 ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டார்.
தொடர்ந்து தரங்கம்பாடியில் 1718 ஆண்டு ஆசியாவின் முதல் புதிய எருசம் தேவாலயத்தை கட்டினார். பின்னர் 37 வயதில் உடல்நலக்குறைவால் 1719 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி காலமானார். இவரது உடல் அவர் எழுப்பிய தேவாலயத்தின் முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனிடையே சீகன்பால்குவின் 303 ஆவது நினைவு தினம் இன்று தரங்கம்பாடி பகுதியில் கடைபிடிக்கப்பட்டது.
தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சீகன்பால்குவின் திருவுருவச் சிலைக்கு நாகை வடக்கு மாவட்டம் பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சீகன்பால்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu