சீர்காழி அருகே நடுக்கடலில் 3 பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்து

சீர்காழி அருகே நடுக்கடலில் 3 பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்து
X

படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள்.

சீர்காழி அருகே பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்து.

சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்து. படகுகளை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்த கந்தன், ரமேஷ், சூரன், சின்னையா, வல்லரசு, மாரியப்பன், சித்திரவேல் உள்ளிட்டோருக்கு சொந்தமான 20 படகுகளில் 120 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசி உள்ளது. இதில் கந்தன், ரமேஷ், சூரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான மூன்று படகுகள் நிலை தடுமாறி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை அறிந்த அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தவர்களை மீட்டு தங்கள் படகுகள் மூலம் கரை சேர்த்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய மூன்று படகுகளை மீட்கும் பணியில் தொடுவாய் கிராம மீனவர்கள் உதவியுடன் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை இரண்டு படகுகள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story