வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை...

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை...
X
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த 3 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது.

பூம்புகார் தொகுதியில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், சீர்காழி தொகுதியில் திமுக சார்பில் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் இருந்து பேரணியாக வந்து கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!