42 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த 25 நண்பர்கள்: மகிழ்ச்சியை பகிர்ந்தனர்

42 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த 25 நண்பர்கள்:  மகிழ்ச்சியை பகிர்ந்தனர்
X
மயிலாடுதுறையில் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட கல்லூரி முன்னாள் மாணவர்கள், பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட கல்லூரி முன்னாள் மாணவர்கள்,பசுமை நிறைந்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 42 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் இன்று சந்தித்து கொண்டனர். இக்கல்லூரியில் 1977 ஆண்டு முதன்முதல் துவங்கப்பட்ட கணிதவியல் துறையில் சேர்ந்து 32 மாணவர்கள் பயின்றுள்ளனர்.

பின்னர் கல்லூரி படிப்பு முடித்து பிரிந்து சென்ற மாணவர்களில் ஒரு சில மாணவர்கள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்ட நிலையிலும், மேலும் சிலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், 32 மாணவர்களில் தற்போது 25 மாணவர்கள் ஒன்று இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இன்று மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது தங்கள் பயின்ற கால கல்லூரி நினைவுகளை நினைவு கூறி ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து இப்போது ஓய்வு பெற்ற நிலையில், வயதான காலத்தில் பழைய நினைவுகளை தங்களுக்குள் அசை போட்டுக் கொண்டிருந்த சூழலில் இன்று அனைவரும் ஒன்று கூடி பகிர்ந்துகொண்ட சம்பவம் மனமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது‌ என தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil