முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம்  கடைகள் அடைப்பு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இன்று முழு ஊரடங்கையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த 6ம்தேதி முதல் தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறது. அந்த வகையில் 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் காமராஜர் சாலை பெரியகடைவீதி கூட்டம் நிறைந்த வண்டிக்கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story
crop opportunities ai agriculture