மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் தர்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல்மூட்டைகளை நேரடிநெல்கொள்முதல் நிலயங்களில் அடுக்கி வைத்துள்ளனர்.
அவற்றை அரைவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு 100 லாரிகள் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
ரயில் நிலையத்தில் உள்ள 50 சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி தர்மபுரியில் உள்ள அரிசி அரவை மில்லுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து வெளி மாவட்டத்திற்கு நெல்லை அனுப்பும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகள் அனைத்தும் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu