மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் நெல்மூட்டைகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் நெல்மூட்டைகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு
X

மயிலாடுதுறையில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் நெல் மூட்டைகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்து தற்போது சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான அரசு நேரடி நெல்கொள்முதல் நிலைங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அந்தந்த அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதனால் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இடவசதி இல்லாததால் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்க முடியாமலும் அடுக்கி வைத்து காத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து அரசுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகளை சரக்கு ரயில்மூலம் அரவைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது. 200 லாரிகளில் நெல்மூட்டைகளை ஏற்றி கிடங்கிற்கு எடுத்து செல்லாமல் நேரிடையாக மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து சென்னைக்கு அரவைக்காக அனுப்பினர். குறுவை சாகுபடிக்காக பிடித்தம் செய்த அனைத்து நெல்லையும் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!