சீர்காழி அருகே திருவெண்காட்டில் 2 புதிய மின்மாற்றிகள் திறப்பு

சீர்காழி அருகே திருவெண்காட்டில் 2  புதிய மின்மாற்றிகள் திறப்பு
X
சீர்காழி அருகே திருவெண்காட்டில்  2 புதிய மின் மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் 2 புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு திருவெண்காடு தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் சதீஷ்குமார் உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி ,உதவி மின் பொறியாளர் ரமேஷ் குமார், உதவி செயற்பொறியாளர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு